கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் வீடியோ!
மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் நடுவானில் மோதுகிறது. இதையடுத்து, இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகளும், ஹெலிகாப்டர்களின் துண்டுகள் காற்றில் பறக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
Military helicopters crash mid-air in Malaysia. pic.twitter.com/vtMOdZRZR1
— Sheri™ (@FFT1776) April 23, 2024
HOM (M503-3) மற்றும் Fennec (M502-6) ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இதில், HOM (M503-3) ஹெலிகாப்டரில் ஏழு பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணித்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்களில் இருந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மலேசிய கடற்படை தினத்தின் ஒத்திகை நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் சிக்க்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.