நவராத்திரி விழா - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:09 AM Sep 22, 2025 IST | Web Editor
Advertisement
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோயில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.