Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டி | தங்கம் வென்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

11:34 AM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு
மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement

டெல்லியில் நேஷனல் கராத்தே பெடரேஷன் ஆப்ஃ இந்தியா சார்பில் தேசிய அளவிலான
கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டல்கோட்ரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதில் மற்ற மாணவர்களுடன் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஜெகத்ஹர்சிக் மற்றும் நளமிர்னாலினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் கடுமையாக போட்டியிட்டனர்.

இதையும் படியுங்கள் : #GoldRate | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

இதில் 10வயது ஆண்கள் கட்டா பிரிவு மற்றும் 34 கிலோ எடை பிரிவில் வெற்றி
பெற்று ஜெகத்ஹர்சிக் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். இதே போல் பெண்களுக்கான 14 வயது
கட்டா பிரிவில் நளமிர்னாலினி முதல் இடத்தைப்பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று தங்க பதக்கங்களை வென்றனர்.

போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இருவரும் தங்கள் சொந்த ஊரான மானாமதுரைக்கு இன்று திரும்பினர். மானாமதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :
GoldMedalkarateManathuraiNewDelhisivagangaistudents
Advertisement
Next Article