இளநிலை கலை, அறிவியல் படிப்புகள்: CUET நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு!
பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற என்டிஏ சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ‘CUET’ நடத்தப்படுகிறது. நிகழாண்டு க்யூட் தோ்வு கடந்த மே 15 முதல் 24-ஆம் தேதி வரை முதன் முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதனிடையே, நியாயமான காரணங்களால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி மறுதோ்வை என்டிஏ நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் :ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!
இந்நிலையில், ஜூலை 25 ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து. நேற்று (ஜூலை 28) ‘CUET’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.