தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் நிறைவு!- ’ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம்’
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சி எம்பிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்திய பிரமதாரக மோடி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை எம்பிகள் நினைவு கூர்ந்தனர்.
பிரதமர் மோடிக்கு பதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட பேரணிகள் நடத்தவும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது