For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார் #OmarAbdullah

12:44 PM Oct 16, 2024 IST | Web Editor
ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார்  omarabdullah
Advertisement

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றன. இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : வியாழன் கிரகத்தில் வாழ முடியுமா? விண்கலம் அனுப்பிய #NASA

ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லாவுக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து தேசியமாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்தர் சௌத்ரி மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த ஷகினா இட்டு, ஜாவேத் ராணா, ஜாவேத் தார் மற்றும் சதீஷ் சர்மா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் மற்றும் திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement