தேசிய குடிமைப் பணிகள் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அனைத்துக் குடிமக்களையும் அவர்களுக்குரிய ஆட்சி நிர்வாகத்தினை உறுதிசெய்யத் தமிழ்நாடு உழைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
05:14 PM Apr 21, 2025 IST | Web Editor
Advertisement
தேசிய குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
Advertisement
"தேசிய குடிமைப் பணிகள் தினத்தில், நமது மக்களாட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் உறுதிப்பாடு மிக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆட்சியியல் கொள்கைக்கும் மக்களுக்கும் இடையேயான முக்கியத் தொடர்புக் கண்ணியாக விளங்கும் குடிமைப்பணி அலுவலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தொலைநோக்கினைத் தாக்கம் மிகுந்த செயல்பாடாகக் களத்தில் மாற்றிக் காட்டுபவர்கள் ஆவர்.
சமத்துவம், செயல்திறன், இரக்கம் ஆகியவற்றுடன் அனைத்துக் குடிமக்களையும் அவர்களுக்குரிய ஆட்சி நிர்வாகத்தினை உறுதிசெய்யத் தமிழ்நாடு உழைக்கிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.