நாதக-வின் 40 வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்!
07:34 PM Mar 19, 2024 IST
|
Web Editor
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும், அச்சு, காட்சி மற்றும் வலையொளி ஊடகத்தினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
மக்களவை தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வரும் மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
"எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டமானது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் பேரழிச்சியாக நடைபெறவிருக்கின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Article