Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாதகவின் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு! - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தகவல்...

09:34 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்த போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது. இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாதக தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article