Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்..! மனிதர்கள் வாழ முடியுமா?

07:27 AM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

பூமியை விட இருமடங்கு பெரிய புதிய கிரகத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான ஒரே கிரகமாக நம்பப்படுகிறது. இருப்பினும் உயிர்கள் இருந்ததற்கான மற்றும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்த்தில் உள்ளனவா என்கிற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பூமியைப் போலவே கண்டிப்பாக வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பதால் மற்ற கிரகங்களை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் ; ஆஸ்திரேலிய ஓப்பன்: 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் ரோகன் போபண்ணா அசத்தல்…!

குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதையடுத்து,  பூமியை போலவே புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது,

"பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்  Hubble Space தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இந்நிலையில், பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாறைகள் நிறைந்த கிரகத்தின் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய சான்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால் வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும் போது இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags :
AmericadiscoveredearthHumanNASAnew planetScientistssurvive
Advertisement
Next Article