ஒளிரும் இந்து குஷ் மலைத்தொடரின் புகைப்படத்தை பகிர்ந்த நாசா விண்வெளி வீரர்!
நாசா விண்வெளி வீரர் லொரல் ஓ'ஹாரா, ஒளிரும் இந்து குஷ் மலைத்தொடரின் புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான ஒரே கிரகமாக நம்பப்படுகிறது. இருப்பினும் உயிர்கள் இருந்ததற்கான மற்றும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்த்தில் உள்ளனவா என்கிற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பூமியைப் போலவே வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பதால் மற்ற கிரகங்களை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்: “கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
இதையடுத்து, பூமியை போலவே புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த நாசா விண்வெளி வீரர் லொரல் ஓ'ஹாரா, ஒளிரும் இந்து குஷ் மலைத்தொடரின் புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Alpenglow: just as magical from space as it is on Earth. Near the Hindu Kush mountain range in Central and South Asia. pic.twitter.com/JPYQTevZZN
— Loral O'Hara (@lunarloral) January 18, 2024