Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3வது முறையாக பதவி ஏற்கும் நரேந்திர மோடி | காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை...

08:36 AM Jun 09, 2024 IST | Web Editor
Advertisement

காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Advertisement

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று  பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தும் நடைபெற இருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷரிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். விளையாட்டு, சினிமா பிரபலங்கள், மதத்தலைவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானம், உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்

பதவி ஏற்பு விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி, அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் நரேந்திர மோடியுடன் ராஜ்நாத் சிங் முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
BJPNarendra modiprime minister
Advertisement
Next Article