"EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" - இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேச்சு!
"EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" என இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
” இந்திய நீதிப்பயணத்தை முடக்க மத்திய அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகத்தான போராடுகிறோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது உண்மையல்ல; இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையம் உள்ளது, அதற்கு எதிராகத்தான் போராடுகிறோம்.
இந்த பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகிறார்கள். EVM இயந்திரங்களை அரசியல் கட்சிகள் முன்பு எடுத்துக்காட்ட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.