Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ரூ.100 அனுப்பிய பழங்குடியின பெண் - #Odisha -வில் நெகிழ்ச்சி!

07:02 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு மோகன் சரண்மாஜி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் பைஜயந்த் ஜெய்பாண்டா கலந்து கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பைஜயந்த் ஜெய்பாண்டாவிடம் 100 ரூபாய் கொடுத்து பிரதமர் மோடிக்கு அனுப்புமாறு கூறியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ” குடும்பங்கள் கொண்டாடும் படமாக ‘ #Vettaiyan ’ மாறியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” – இயக்குநர் த.செ.ஞானவேல் பேச்சு!

அவரிடம் பைஜயந்த் ஜெய்பாண்டா பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் போதும், பணம் அவசியம் இல்லை என வலியுறுத்திய போதும், அந்த பெண் தனது நன்றியை தெரிவிக்க இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்புமாறு கூறினார். மேலும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அந்த பணத்தை வழங்கியதாக அவர் கூறினார்.இது தொடர்பான புகைப்படத்தை பைஜயந்த் ஜெய்பாண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதோடு அந்த பெண்ணின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

இதற்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி:

''இந்த அன்பால் நான் உள்ளம் நெகிழ்ந்தேன். என்னை எப்போதும் ஆசிர்வதிக்கும் நமது பெண் சக்திகள் முன்பு தலை வணங்குகிறேன். அவர்களுடைய ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிக்கிறது''

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
IndiamodiNews7Tamilnews7TamilUpdatesodishaPMOIndiatribal woman
Advertisement
Next Article