நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்!
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன், ஆதிக்க சாதியை சேர்ந்த தனது சக வகுப்பு மாணவர்களால் சராமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு, கொடும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குணமடைந்த அவர் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்தார்.
அவரது உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே மாணவனை வரவைத்து 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னதுரை தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையாளர் சாந்தா ராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.