Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#sasikumardir நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

09:33 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இந்நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த பின்பும் நீண்ட நாள்களாகத் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட்டை சசிகுமார் வெளியிட்டுள்ளார். அதில் நந்தன் திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.

 

Tags :
Balaji SakthivelNandhanNandhan From Sep20news7 tamilNews7 Tamil Updatesreleasing
Advertisement
Next Article