'நம்மவர் படிப்பகங்கள்' - விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் திறப்பு !
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வேந்தோணி உள்ளிட்ட கிராமங்களில் 'நம்மவர் படிப்பகங்கள்' எனும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கமல் பண்பாட்டு மையம் மற்றும் வடஅமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் கலந்து கொண்டு நேற்று (ஜன.26) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
இந்த நூலகத்தில் இலக்கியம், வரலாற்று புத்தகங்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த நூலகத்தில் அதிநவீன கணிணிகள், இணையதள வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், கமல் பண்பாட்டு மைய நிர்வாகிகள், வடஅமெரிக்கா கமல் நற்பணி இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.