For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்" - 'பனை' இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!

07:23 AM May 28, 2024 IST | Web Editor
 திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்   தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்     பனை  இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு
Advertisement

*திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள், இன்றைய தமிழ் சினிமாவில்
திரைப்படங்கள் பெயரை பார்த்து நான் வெட்கப்படுகிறேன் துக்கப்படுகிறேன்* என பனை திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பிரசாத் அரங்கில், ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் மற்றும் வடிவுக்கரசி,  இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பனை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று. இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து இசை தட்டை வெளியிட அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பெற்றுக்கொண்டார்.

 விழா மேடையில் பேசிய கவிஞர் வைரமுத்து பேசியதாவது..

பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர், மக்களின் பெயர் மற்றும்
நம்முடைய கலாச்சாரத்தின் குறியீடு என்றுதான் கருதுகிறேன்.  ஒரு படத்திற்கு
தலைப்பு மிக மிக முக்கியம். இப்போது வருகிற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை
பார்த்தால் தான் கொஞ்சம் துக்கப்படுகிறேன். சில நேரங்களில் வெட்கம் படுகிறேன்.

அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அது வெறும் ஒரு
சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம். தமிழில் தலைப்புகளுக்காக
பஞ்சம். தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களை தனித்துவமான
பெயர்களை ஏன் நீங்கள் சூடக் கூடாது என்று பார்க்கிறேன். இதற்காக பத்திரிகைகளில் அதிகாலை செய்திகளை புரட்டிப் பார்க்கிறேன்.

படத்தின் தலைப்புகளை பார்க்கிறபோது அடுத்த பக்கம் செல்வதற்குள் அந்த தலைப்பு ஒரு மின்னலைப் போல் என் மூளையை கடந்து முடித்து விடுவதை பார்க்கிறேன்.  தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா என் இருதயத்தில் சென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா? என்னை திருப்பி உச்சரிக்க வைக்க வேண்டாமா?

ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு ஒரு கருத்தை சொல்வதாகவும் இன்னொன்று ஒரு காட்சியை விரியச் செய்வதாகவும் அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று தான் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் தலைப்பு வைத்தார்கள். பழைய தலைப்புகளை எல்லாம் பார்த்தா அந்த தலைப்பில் கதை வரும் மங்கையர் உள்ளம் மங்காத செல்வதென்றால் ஒரு சமூகத்தின் பண்பாடே வந்துவிடும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொன்னவுடன் ஒரு கலாச்சாரத்தின் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.

அதெல்லாம் பழசு என்று நமக்குத் தெரியும் ஆனால் அந்த வழியில் வருகிறவர்கள்
தலைப்புகளில் ஒரு ஆழ்ந்த கவனத்தை செலுத்தி நிகழ்காலத்தில் பொருள் குறித்தும்
நிகழ்காலத்தில் மாற்றம் குறித்தும்  ஏதாவது மக்களுக்கு சொல்லிச் செல்ல வேண்டும்
என்று நான் விரும்புகிறேன். தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கதாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்துக்கு சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு கவிஞனுடைய வேண்டுகோள் அல்லது ஒரு பாடலாசிரியரின் வேண்டுகோள் என்று நினைத்து விடாதீர்கள் இது தமிழ் மக்களின் வேண்டுகோள். பாமரனின் வேண்டுகோள் உழவனின் வேண்டுகோள். அதேபோல மூட்டை தூக்குகிற தொழிலாளி, விறகு வெட்டியின்
வேண்டுகோளாகும். அவன் தமிழோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தலைப்பை மாறுபட்ட முறையில் தமிழுக்கு விரோதமாக வைத்து அந்த படம் வெற்றி பெற்றுவிட்டது என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன் வெற்றியும் பெறுவதில்லை.

மேலும் இந்த படத்திற்கு எனக்கு கதை சொன்ன இயக்குனர் இந்தப் படத்திற்கு விதை என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னார் நான் சொன்னேன் விதை நல்ல பெயர் தான் ஆனால் நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளி இருக்கிறது எனவே இந்த படத்தின் ஒட்டுமொத்த இருதய துடிப்பும் தலைப்புக்குள் வரவேண்டும் என்றால்
பனை என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னேன்.விதையை விட பனை எனக்கு இன்னும் பக்கத்தில் இருக்கிறது ஐயா என்று சொன்னார் அவருக்கு வாழ்க என்று சொன்னேன்.

மேல்நாட்டில் எப்படி எல்லாம் தலைப்பு வைப்பார்கள் தெரியுமா?  ஒரு ஆங்கில
படத்துக்கு தலைப்பு காற்றுக்கு படிக்க தெரியாது என்று வைத்திருந்தார்கள்.  எப்படி
தலைப்பு வைத்தான்  தெரியுமா?  காற்று வீசுகிறது..  ஒரு மரத்தின் மீது வீசுகிறது ஒரு மாளிகை மீது வீசுகிறது ஒரு புல்வெளியின் மீது வீசுகிறது ஒரு குழந்தையின் மீது வீசுகிறது ஒரு சாலையில் வீசுகிறது ஒரு சோலையில் வீசுகிறது.. என வைத்துக் கொள்வொம்.

அப்போது ஓரிடத்தில் பூக்களை பறிக்காதீர்கள் என்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது இப்போது காற்று வேகமாக அடிக்கிறது பூக்கள் புல்வெளியில் உதறுகின்றன.  எனவே தான் காற்றுக்கு படிக்க தெரியாது என தலைப்பு வைத்திருக்கிறான்.   ஒரு தலைப்பு உங்களுக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்க வேண்டும்.

டெல்லியில் ஒருவன் தன் சுயசரிதையை எழுதிவிட்டு “மை ஸ்டோரி” என்று
தலைப்பு வைத்தால் நூறு பிரதிகள் கூட விற்கவில்லை என்ன என்று யோசித்துப்
பார்த்தார் அட்டையை கிழித்து எறிந்து விட்டு இன்னொரு தலைப்பு வைத்தான் ஒரே
நாளில் 3000 பிரதிகள் விற்று விட்டன.  அவர் வைத்த தலைப்பை மாற்றி
”என் மகனின் தந்தையின் கதை” என்று தலைப்பு  வைத்தான்.” என கவிஞர் வைரமுத்து பேசினார்.

Tags :
Advertisement