Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர்? வெளியான புது தகவல்!

07:58 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த நிகழ்வு அரசியலுக்கான அடித்தளமாய் கருதப்பட்டது. பின்னா் ஜூலை மாதம் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுடன் நடிகா் விஜய் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா்.

சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகளுடன் விஜய் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டாா். இக்கூட்டத்தில் தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், தேர்தல் அரசியலைச் சந்திக்க விரைவில் தன் கட்சியைப் பதிவு செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜயின் கட்சிக்கு, ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதோடு, விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் கொடியில் நடிகர் விஜயின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது போல் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் கொடியில் நடிகர் விஜயின் புகைப்படம் இடம் பெறவில்லை. கொடியில் இடம்பெறும் சின்னம் மற்றும் அதனுடைய நிறங்கள் முழுவதும் இன்னும் நான்கு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எனவும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் விஜய் களத்தில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
actor vijaynews7 tamilNews7 Tamil UpdatesParty Namepolitical partyvijay
Advertisement
Next Article