For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோப்பையை வெல்ல பெயரை மாற்றும் யுத்தி... ஆர்சிபி அணியின் புதிய முயற்சி!

02:59 PM Mar 15, 2024 IST | Web Editor
கோப்பையை வெல்ல பெயரை மாற்றும் யுத்தி    ஆர்சிபி அணியின் புதிய முயற்சி
Advertisement

2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

Advertisement

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே (சென்னை), எம்ஐ (மும்பை) அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

16 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆகிய 3 அணிகள் இதுவரை ஒருமுறைக்கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், கடந்த 7 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடப்பாண்டில் ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்சிபி அணி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ‘காந்தாரா’ படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி இந்த வீடியோவில் நடித்துள்ளார். மேலும் அவர் அருகே மூன்று எருமை மாடுகள் புல்வெளியில் நிற்கின்றன. அந்த மாடுகளின் மீது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என தனித்தனியாக எழுதப்பட்ட சால்வைகள் போர்த்தப்பட்டுள்ளன. இதில் பெங்களூர் என எழுதப்பட்டு இருக்கும் மாட்டினை மட்டும் ரிஷப் ஷெட்டி விரட்டி விடுகிறார். பின்னர் ”அர்த்தம் புரிந்ததா?” என அவர் கேட்பதுடன் வீடியோ முடிகிறது.

இதன் மூலம் அணியில் உள்ள பெங்களூர் என்னும் வார்த்தையை நீக்கிவிட்டு ‘பெங்களூரு’ என மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பெயர் மாற்ற அறிவிப்பு மார்ச் 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்ற எதிரொலியால் இந்தாண்டு பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதேபோல், 2018-ம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயர் டெல்லி கேபிடல்ஸ் என மறுபெயரிடப்பட்டது. ஐபிஎல் 2021 க்கு முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயர் பஞ்சாப் கிங்ஸாக மாற்றப்பட்டது. அண்மையில், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி தனது பெயரில் உள்ள ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் என பெயர் மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த பெயர் மாற்றங்கள் அந்தந்த அணிக்கு வெற்றி வாய்ப்பை கொண்டு சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement