Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாமக்கல் | அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து!

03:17 PM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

நாமக்கல்லில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதி விபத்தானது.

Advertisement

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து மரகதலிங்க தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் வந்துசெல்வது வழக்கம். அந்த நாட்களில் கோயிலின் மலைப்பாதை வழியே இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் மக்கள் பயணம் செய்வர்.

இந்நிலையில், சீதாராம்பாளையம் பகுதியில் மரக்கடை நடத்தி வரும் தரம்ஸ்ரீ தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற கார் மலைப்பாதை தடுப்புச் சுவர் மீது மோதி தடுப்பு சுவரின் நடுவே வாகனம் சிக்கிக்கொண்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக தரம்ஸ்ரீ, அவரது மனைவி ரேகா மற்றும் அவரது மகள் ஹேத்தல் ஆகிய மூவரும் உயிர் தப்பினர். அதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் தீயணைப்பு அலுவலர் கரிகாலன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் காரை மீட்டனர். கார் சுவற்றின் மீது சிக்கிக் கொண்ட சம்பவத்தால் பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags :
AccidentArdhanareeswarar templecarnamakkalNews7 Tamil UpdatesNews7Tamil
Advertisement
Next Article