For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம்! - புதிய வேட்பாளர் அறிவிப்பு...

08:18 AM Mar 22, 2024 IST | Web Editor
நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம்    புதிய வேட்பாளர் அறிவிப்பு
Advertisement

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேட்பாளரை கொமதேக மாற்றியுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்.20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. தமிழ்நாட்டில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்-கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக-வுக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியது.

இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி அந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி  என்பது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement