For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

12:37 PM Nov 01, 2023 IST | Student Reporter
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா   லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

Advertisement

நாமக்கல்  கோட்டைக்கு கீழே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.  1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.  மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும்,  நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சிலையானது ஒரே கல்லில் 18 அடி உயரம் கொண்டுள்ளது.  இரு கைகளை கும்பிட்டவாரு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை செய்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா
நடத்தப்பட்டது. அதன் பின் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு
திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றன.

இதையும் படியுங்கள்; யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை 4
மணிக்கு வேள்வி அமைக்கப்பட்டு கும்ப பூஜை தொடங்கப்பட்டன.  பின்னர் 31 ம் தேதி
காலை அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு
பெருவிழாவையொட்டி பட்டாச்சாரியர்கள் தமிழ் முறைப்படி ஆஞ்சநேயரின் மூலவர்
சிலைக்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை வெகு விமரிசையாக
நடத்தினர்.  முன்னதாக காலை 7 மணிக்கு அனுதின ஹோமம், தாரா ஹோமம் நடைபெற்றன.

இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி அமைச்சர் மதிவேந்தன்,  எம்.பி
ராஜேஷ்குமார்,  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். உமா,  சட்டமன்ற உறுப்பினர்
ராமலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  பக்தர்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக இந்த பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக எஸ் பி
ராஜேஷ் கண்ணன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.  தொடர்ந்து திருக்கூட நன்னீராட்டு பெருவிழாவில்  எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டன.

ஆஞ்சநேயர் திருக்கூட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி நாமக்கல் தாலுக்கா முழுவதும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement