7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி வருகிறது. அதே போன்று இந்தாண்டும் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் – வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தகவல்!
இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த கோயிலில் 18 அடி உயரத்தில், நின்றகோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், 7 டன் மலர்களால் திங்கள்கிழமை (ஜன- 1) அதிகாலை அபிசேகம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமியை தரிசிக்க வந்தனர்.
சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும், சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.