For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது 'நா ரெடி' பாடலின் முழு வீடியோ -இணையத்தில் வைரல்!

01:06 PM Nov 19, 2023 IST | Web Editor
வெளியானது  நா ரெடி  பாடலின் முழு வீடியோ  இணையத்தில் வைரல்
Advertisement

லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் "நா ரெடி" என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில்,  லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் "நா ரெடி" என்ற பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, "நா ரெடி தான்" பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement