For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

என்.சங்கரய்யா மறைவு | இன்று காலை 11 மணிக்கு இறுதி நிகழ்வுகள்...

07:20 AM Nov 16, 2023 IST | Web Editor
என் சங்கரய்யா மறைவு   இன்று காலை 11 மணிக்கு இறுதி நிகழ்வுகள்
Advertisement

மூத்த தலைவர் சங்கரய்யா இறுதி நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 

Advertisement

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்குக் கேரள முதலமைச்சர், தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் , இறுதி நிகழ்ச்சிகள் இன்று (வியாழக்கிழமை) இறுதிச் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகைசால் தமிழர்,முதுபெரும் பொதுவுடைமை போராளி,விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா. விடுதலைப் போராட்ட வீரராக, சட்டப்பேரவை உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராகத் தமிழகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டுகளை போற்றும் விதமாக, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும். கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். ஒரு வார காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 3 நாட்கள் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இறுதி ஊர்வலம் - எல்.பி சாலை, அடையாறு டெப்போ (HP பெட்ரோல் பங்க் அருகில்) இருந்து செந்தொண்டர் அணிவகுப்புடன் தொடங்கும் எனவும்  இறுதி நிகழ்ச்சிகள் காலை 12.00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

Advertisement