Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

10:08 AM Oct 26, 2023 IST | Student Reporter
Advertisement
மயிலாடுதுறை அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற, சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்.
வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதா பானு என்ற மனைவியும்,  2 மகள்களும்
உள்ளனர்.  மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.  விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சஹிதாபானு நேற்று காலை ரயிலில் அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது பின் பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisement

பின்னர் அவர் அறையில் சென்று பார்த்தபோது பீரோவில் கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் தங்க நகை மற்றும் ரூ 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சஹிதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.  தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா, டிஎஸ்பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

ரூபி.காமராஜ்

Tags :
#people feared2 lakhs money52 savaran gold theftA mysterious gangMayiladurai districtnear TirumangalamPolice Investigation
Advertisement
Next Article