Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொல்கத்தாவில் மாயமான வங்கதேச எம்.பி. சடலமாக மீட்பு!

03:39 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தாவில் மாயமான வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனாா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனாா்,  கடந்த 12-ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா சென்றிருந்தார்.  அங்கு பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அவா்,  வெளியில் செல்வதாக கூறிவிட்டு,  வீட்டிலிருந்து சென்றுள்ளாா்.  அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

இதனையடுத்து அவரது நண்பா் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தாா்.  கடந்த 9 நாள்களாக அன்வருல் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.  இந்த நிலையில்,  இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து,  தக்காவில் உள்ள அன்வருல் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறும்போது, "அன்வருல் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அவரது கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்வருல் கொலை வழக்கில் தொடர்புடைய மூவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். கொலைக்கான காரணம் விரைவில் தெரிவிக்கப்படும்.  அவரது உடல் வங்கதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  இந்தியா காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.”

இவ்வாறு வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் தெரிவித்துள்ளார்.

Tags :
Anwarul AzeemBangladeshKolkata
Advertisement
Next Article