For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MyMaima - சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் Promo Song வெளியானது!

09:05 PM Sep 21, 2024 IST | Web Editor
 mymaima   சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் promo song வெளியானது
Advertisement

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோ பாடலான மை மைமா பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

வைபவ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழு படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டது. அந்த வகையில் ஜான் விஜய் இப்படத்தில் டமார் லால் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல வைபவ் பாண்டி எனும் கதாபாத்திரத்திலும் மொட்டை ராஜேந்திரன் மெமரி தாஸ் எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோ பாடலான மை மைமா என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் கானா பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு மற்றும் ஆஃப்ரோ வரிகளில் கானா குணா, கானா தரணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Tags :
Advertisement