மியான்மர் அதிபரின் திடீர் மரணம் - அடுத்து என்ன? அரசியல் குழப்பத்தில் சிக்கிய நாடு!
தற்காலிக அதிபர் யூ மைன்ட் ஸ்வீ (74) உடல்நலக்குறைவால் காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன . மியான்மரில் 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு அவர் இந்த பதவியை வகித்தார். அவரது மறைவு, ஏற்கனவே அரசியல் குழப்பத்தில் இருக்கும் மியான்மருக்கு மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூ மைன்ட் ஸ்வீ ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. 2016-ஆம் ஆண்டு முதல் 2021 வரை மியான்மரின் துணை அதிபராகப் பணியாற்றினார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அவர் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்ட பிறகு, இராணுவம் யூ மைன்ட் ஸ்வீயை இந்த பதவிக்கு நியமித்தது.
2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு மியான்மர் ஒரு கடுமையான உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையே மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த சூழலில், தற்காலிக அதிபரின் மறைவு, மியான்மரின் அரசியல் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.