“அன்புமணியின் பெயருக்கு பின் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது... தேவைப்பட்டால்...” - ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு
கூட்டம் இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது இதில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம் எனது பெயரை பயன்படுத்த கூடாது” என அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
உங்கள் கூட்டத்தில் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு ”தஞ்சாவூர், மாவட்ட செயலாளர் மு.க. ஸ்டாலினின் பாசத்தை விட இல்லை” என்றார். இரண்டாக உள்ள பாமக தலைமை ஒன்றாக இணைந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியதற்க்கு, ”அது அவரது ஆசை” என்றார். அந்த ஆசை நிறைவேறுமா? என மீண்டும் கேட்டதற்கு ”போகப் போகத் தெரியும்” என கூறிவிட்டு நகைச்சுவையாக பாட்டு பாடினார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என கேட்டதற்கு அதற்கும் ”போகப் போக தெரியும்” எனக் கூறி பாட்டு பாடி பேட்டியை நிறைவு செய்தார்.
முன்னதாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ”மத்திய அரசு பருத்திக்கு கூடுதல்
விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்றும் கும்பகோணம் மாவட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எதிர்வரும் பத்தாம் தேதி பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாடு நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” எனவும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.