மட்டன் பிரியாணி ரூ.200! டீ, காபி ரூ.15! - வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதையும் படியுங்கள் : பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை சென்னை மாநகராட்சி நிர்ணயித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தும் பொருள்களின் அதிகபட்ச விலை விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பட்டியலில் கூறியிருப்பதாவது :
- ஒருநாள் பந்தல் அமைப்பதற்கு ரூ.1,500 முதல் ரூ.3,500 வரை
- சுவரொட்டிகளுக்கு ரூ.6,500 முதல் ரூ. 12,500 வரை
- சால்வை ஒன்றுக்கு ரூ.150,
- குதிரையை வாடகைக்கு எடுத்தால் 4 மணி நேரத்திற்கு ரூ.6,000,
- பட்டாசு ரூ.600,
- கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஏற்பாடு செய்தால் 3 மணி நேரத்திற்கு ரூ.10,000 என்று கணக்கில் கொள்ளலாம்.
- மேடை முன்பு தோரண அலங்காரம் அமைப்பதற்கு ஒரு மீட்டருக்கு ரூ.310, வாழை மரம் ஒன்றுக்கு ரூ.700 என்று நிர்ணயம்.
- இசைக்குழு வாடகைக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.4,500,
- பலூன் அலங்காரம் அமைக்க ஒரு பலூனுக்கு ரூ.6 செலவு செய்யலாம்.
- ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர் ரூ.90,
- பூசணிக்காய் ஒன்றுக்கு ரூ.120,
- தொப்பி ஒன்றுக்கு ரூ.50,
- பூ மாலை பெரியது ரூ.400, சிறியது ரூ.250,
- பேப்பர் மாஸ்க் ரூ.3,
- சிறிய பூங்கொத்துக்கு ரூ.150,
- சிறிய அளவிலான துண்டுக்கு ரூ.84,
- பெரிய அளவிலான துண்டுக்கு ரூ.305,
- தேங்காய் ஒன்றுக்கு ரூ.30,
- எலுமிச்சை பழம் ஒன்றுக்கு ரூ.5 செலவு செய்யலாம்.
- மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.150, வெஜ் பிரியாணிக்கு ரூ.100 நிர்ணயம்.
- பால் ரூ.20,
- சாப்பாடு ரூ.100,
- டீ ரூ.15, காபி ரூ.20,
- தண்ணீர் கேன் ஒன்று ரூ.35,
- தண்ணீர் பாட்டில் ரூ.20,
- நீர் மோர் ரூ.20,
- குளிர்பானம் ரூ.15 செலவு செய்யலாம்.
- மேலும், 5 நட்சத்திர விடுதிகளில் குளிர்சாதன அறையில் தங்குவதற்கு ரூ.19,500 நிர்ணயம்.
- வாகனம் வாடகைக்கு எடுக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் ரூ.1,150, அதிகபட்சமாக ரூ.8,500 நிர்ணயம்"
இவ்வாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.