For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பணப்பெட்டியை எடுத்த முத்துக்குமரன்... Bigg Boss வீட்டில் தொடருவாரா? அல்லது வெளியேறுவாரா?

08:09 PM Jan 14, 2025 IST | Web Editor
பணப்பெட்டியை எடுத்த முத்துக்குமரன்    bigg boss வீட்டில் தொடருவாரா  அல்லது வெளியேறுவாரா
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் விளையாட்டு சென்று கொண்டிருக்கின்றது. இந்த சூழலில், பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கமாக பணப்பெட்டியை எடுப்பவர்கள் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறுவர்.

ஆனால் இந்த சீசனில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் எடுத்து வருபவர்கள் விளையாட்டை தொடரலாம் என்று புதிய அறிவிப்பை பிக் பாஸ் கொடுத்துள்ளது. நேரத்தை தவறவிட்டால் விளையாட்டை தொடர இயலாது. இந்த சூழலில், முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டு, அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது.

பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுக்கச் செல்லும் காட்சி புரோமோவில் வெளியாகியுள்ளது. பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த தகவல் இன்றைய நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும். முத்துக்குமரன் விளையாட்டை தொடருவாரா அல்லது வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement