Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்” - மோகன்லாலுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

04:06 PM May 21, 2024 IST | Web Editor
Advertisement

மலையாள நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.  கேரளாவில் 44 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.  தமிழிலும் உன்னைப்போல் ஒருவன்,  ஜில்லா,  காப்பான் அண்மையில் வெளியான ரஜினியின் ஜெயிலர் போன்ற வெற்றிப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதன்மூலம் தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நாயகர்களில் ஒருவராகவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகர் மோகன்லால். இதனையொட்டி காலையிலிருந்து  நடிகர்,  நடிகைகள்,  திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதில், “கடும் விமர்சனமும் பகுத்தறிவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் 40 ஆண்டுகளாக முன்னணி நாயகனாக இருக்கிறார்.  400 திரைப்படங்களா? சிலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்.  நான்,  அவர் 500 படங்களில் நடித்து பிரேம் நசீரின் சாதனையை முறியடிப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன்.  இந்தப் பிறந்தநாளில் என் வாழ்த்தும் அதுதான்.  பல சாதனைகளை முறியடிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள் மோகன்லால்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
actorsBirthdayKamal haasanMohanlalWishes
Advertisement
Next Article