Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

10:25 AM Mar 12, 2024 IST | Web Editor
Advertisement

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்,  இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் பங்கேற்றனர். 

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர்.  இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால் முஸ்லிம்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.  அதாவது காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நோன்பு கடைபிடிப்பர்.  ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும்.

ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்பர்.  அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்,  இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் நேற்று பங்கேற்றனர்.

Tags :
fastingMuslimsNew YorkRamadanRamadan2024
Advertisement
Next Article