For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது.
07:55 AM Mar 02, 2025 IST | Web Editor
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது
Advertisement

இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வர்.

Advertisement

8வது மாதமான மாதமான ஷஃபான் மாதம் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ரமலானுக்காக நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்தார்.

பிறை தென்படவில்லை - ஞாயிறு முதல் ரமலான் நோன்பு தொடக்கம்! - News7 Tamil

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு கடை பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேய இஸ்லாமியர்கள் உணவை உட்கொண்டு நோன்பை தொடங்கினர். மேலும், பள்ளிவாசல்களில் அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் நோன்பு என்றால் என்ன?

ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.

பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள்.

ரமலான் நோன்பு எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது?

பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரீச்சம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள்.

Tags :
Advertisement