Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TheGoat திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா? - அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்!

09:34 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

தி கோட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரையிலருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இப்படத்தின் ட்ரெயிலர் இன்று (ஆக. 17) வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெயிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் கோட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதுவரை எதுவும் திட்டமிடவில்லை. இனிதான் இசை வெளியீட்டு விழா குறித்து பேசி திட்டமிடப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
AGSArchana KalpathiNews7Tamilnews7TamilUpdatesthalapathy vijayThe GoatThe Greatest of All TimeTrailervenkat prabhuvijay
Advertisement
Next Article