"இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்" - இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000க்கும் அதிகமாக படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவான பாடல்கள் இன்றும் பலரது பேவரைட் ஆக உள்ளது. இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜுன் 2) தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் #Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட்… pic.twitter.com/pB6JVVXavi
— M.K.Stalin (@mkstalin) June 2, 2025
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் சின்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2ம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.