Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் - நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

11:14 AM Jan 25, 2024 IST | Jeni
Advertisement

செய்தியாளர் நேசப்பிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸ்7 தமிழ் நிறுவனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறுப்பாசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நியூஸ்7 தமிழ் ஊழியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர். செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் உரக்க கோஷமிட்டனர்.

இதுதொடர்பான முழு வீடியோவைக் காண :

https://www.facebook.com/news7tamil/videos/1185966695701718

Tags :
CMOTamilNaduNesaPrabhupalladamProtestReporter
Advertisement
Next Article