For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு!

07:48 PM May 03, 2024 IST | Jeni
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்ததுள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 50 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.  2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags :
Advertisement