மும்பை: சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அனில் தேசாய் பரப்புரையில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘BOOM’
தெற்கு மும்பையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் அனில் தேசாய் ரோட்ஷோ நடைபெறும்போது, பாகிஸ்தான் கொடி காணப்பட்டதாக தவறான கூற்றுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டது.
மும்பையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 20) நடைபெறுகிறது. சிவசேனா (UBT) இந்தியக் கூட்டணியில் காங்கிரஸ், NCP (சரத் பவார்) இணைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு எதிராக போட்டியிடுகிறது.
இதனிடையே, பாஜக தலைவர் நிலேஷ் ரானே தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், “UBTயின் ஊர்வலத்தில் பாகிஸ்தானின் கொடி! இனி PFI, SIMI, AL QAEDA ஆட்கள் மாடோஸ்ரீக்கு பிரியாணி எடுத்து செல்வார்கள். மும்பையில் தாவூத்க்கு ஒரு நினைவிடம் கூட கட்டப்படும்” என தலைப்பிட்டு பகிர்ந்தார்.
உண்மை-சரிபார்ப்பு
மும்பை செம்பூரில் சிவசேனா (UBT) தலைவர் அனில் தேசாய் ரோட் ஷோவில் வைரலான வீடியோவில் உள்ள கொடி இஸ்லாமியக் கொடி என்றும், சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுவது போல் பாகிஸ்தான் கொடி இல்லை என்றும் BOOM கண்டறிந்துள்ளது.
இரண்டு கொடிகளுக்கு இடையிலான ஒப்பீடு
செம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை வீடியோ குறிப்பைப் பெறப்பட்டது. செம்பூர் பகுதி கூகுள் மேப்பில் சோதனை செய்யப்பட்டது. வைரலான அந்த வீடியோ செம்பூர் ஸ்டேஷன் அருகே உள்ள சாலையில் படமாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. செம்பூரில் உள்ள 5 PL லோகண்டே மார்க்கில் உள்ள அதே மேம்பாலம் மற்றும் கட்டடங்களை கூகுள் மேப்பில் பார்க்கும் போது அது, வைரலான வீடியோவுடன் பொருந்தியது.
முடிவு:
மும்பை செம்பூரில் சிவசேனா (UBT) தலைவர் அனில் தேசாய் ரோட் ஷோவில் வைரலான வீடியோவில் உள்ள கொடி இஸ்லாமியக் கொடி என்றும், சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுவது போல் பாகிஸ்தான் கொடி இல்லை
Note : This story was originally published by ‘BOOM’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.