216 ரன்கள் இலக்கு... மும்பை அணியின் வெற்றி பயணம் தொடருமா? லக்னோவுக்கு சவால்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் மும்பை பேட்டிங் செய்தது.
அதன்படி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்தது மும்பை அணி. இதன்மூலம் லக்னோ அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரியால் ரிக்கல்டன் 58 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 54 ரன்களும் அடித்தனர். லக்னோ தரப்பில் ஆவேஷ்கான், மயாங்க் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், ப்ரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 216 ரன்களை இலக்காக கொண்டு லக்னோ களமிறங்க உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி, கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் 200 ரன்கள் தாண்டும் போட்டிகளில் எப்போதும் மும்பை அணி வெற்றியை பதிவு செய்யும். அந்த வகையில் இன்றும் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.