பஞ்சாப் அணிக்கு 193 ரன்களை இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், 33வது லீக் போட்டி பஞ்சாபில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம் முதலில் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். முதலில் ரோஹித் சர்மா - இஷாந்த் கிஷன் இணை களம் புகுந்தது. இதில் 3வது ஓவரிலேயே 8 ரன்கள் எடுத்து இஷாந்த் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 78 ரன்களில் அவுட்டானார். 12வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார் ரோஹித். இதன் மூலம் மும்பையில் அதிக சிக்சர்கள் விளாசியவர்களில் முதலிடத்தில் உள்ளார்.
36 ரன்களில் ரோகித் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டிம் டேவிட் 14 ரன்களில் வெளியேற, ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களும், 36 ரன்களும் குவித்தனர். மும்பை அணி தரப்பில் சேம் கரண் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் காகிசோ ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.