Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வீரர் சாதனை!

06:25 PM May 04, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா படைத்துள்ளார்.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : கோடை காலத்தில் அடிக்கடி அஜீரண கோளாறு? இந்த உணவுகளை சேர்த்து எடுத்துக்காதீங்க!

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பியூஸ் சாவ்லா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பியூஸ் சாவ்லா இதுவரை 184 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் 3- வது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் :

யுஸ்வேந்திர சஹால் - 200 விக்கெட்டுகள்

பியூஸ் சாவ்லா - 184 விக்கெட்டுகள்

டுவைன் பிராவோ - 183 விக்கெட்டுகள்

புவனேஷ்வர் குமார் - 178 விக்கெட்டுகள்

Tags :
Beuys ChawlaIPLmiMIvsKKRMumbai IndiansRecordwickets
Advertisement
Next Article