For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தோனியின் 82 வயது ரசிகை - இணையத்தில் வைரல்!

01:26 PM Apr 09, 2024 IST | Web Editor
தோனியின் 82 வயது ரசிகை   இணையத்தில் வைரல்
Advertisement

தோனியின் 82 வயதான தீவிர ரசிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மார்ச்.22 ஆம் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.  இதே போல் ஏப்.23, 28, மே 1, 12, 24,26 ஆகிய தேதிகளிலும் சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.  கிரிக்கெட் உலகில் அவர் பறக்க விடும் சிக்ஸர்கள் வேறு ரகம்.  அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து சொல்லவே வேண்டாம்.  அவர் அடித்து பறக்கவிடும் பந்தோடு சேர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களும் ‘சிக்ஸ் போகணும்’ என பறக்கும்.  அந்த அளவிற்கு தனது ஆட்டத்திறனால் ரசிகர்களை கட்டிப்போடும் காந்த சக்தியை கொண்டவர்.

இந்த நிலையில்,  எம்எஸ் தோனியின் 82 வயதான தீவிர ரசிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ Janaki patti என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரபப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் 82 வயதான தோனி ரசிகர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று சிஎஸ்கே அணியையும்,  தோனியையும் உற்சாக படுத்துகிறார்.  இந்த வீடியோவிற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement