உலகில் மிகவும் பயங்கரமான சவாலை முறியடித்த மிஸ்டர் பீஸ்ட் | வைரல் வீடியோ!
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், வெறிச்சோடிய நகரத்தில் 7 நாட்களைக் கழிக்கும் சவாலை முடித்துள்ளார்.
உலகில் இதுபோன்ற பல இடங்கள் உள்ளன. அவை முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்தன. பின்னர் சில காரணங்களால் அந்த இடங்கள் முற்றிலும் கைவிடப்பட்டு யாரும் இல்லாத நகரமாக உள்ளது. அங்கு மனிதனோ, மிருகமோ யாரும் இல்லை. குரோஷியாவில் 'குபாரி' என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது. இது முற்றிலும் வெறிச்சோடிய ஒரு சிறிய நகரம்.
இங்கு பெரிய கட்டடங்கள், உணவகங்கள் இருந்தாலும் இங்கு யாரும் வசிக்காததால் படிப்படியாகப் பாழடைந்து வருகிறது. உலகின் கடினமான சவால்களில் ஒன்றாக கூறபடும் இந்த வெறிச்சோடிய நகரத்தில் ஏழு நாட்கள் தங்கியிருக்கும் சவாலை தற்போது மிஸ்டர் பீஸ்ட் முடித்துள்ளார்.
1990களில் குரோஷிய சுதந்திரப் போரின் போது இந்த நகரம் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்பட்டது. இதனால், இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்து விட்டு வெளியேறினர். அவர்கள் மீண்டும் இங்குத் திரும்பவில்லை. இந்நிலையில், மிஸ்டர் பீஸ்ட் என்று மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் இந்த நகரத்தில் ஏழு நாட்களைக் கழிக்க முயன்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் ஏராளமாக வழங்கப்பட்டதால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையில், தூங்கும் பைகளும் வழங்கப்பட்டன.
சவாலின் முதல் நாளில், ஜிம்மியும் அவரது நண்பர்களும் திறந்திருந்த ஒரு கட்டிடத்தின் மேல் தங்கள் முதல் நாளை கழித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரவில் கடும் குளிரை சந்திக்க வேண்டியிருந்தது. இரவில் பயமுறுத்தக்கூடிய கண்ணாடி உடைக்கும் சத்தம் கேட்டது. பின்னர், தண்ணீர் விநியோகம் சரியாக கிடைக்கவில்லை என்பதால் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பாதியிலேயே சவாலை விட்டு வெளியேறினர். அத்தகைய சூழ்நிலையில், சவாலை முடிக்க ஜிம்மி மற்றும் மார்க் என்ற இரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
இந்த சவாலின் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை 6 கோடியே 90 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்து, 'இது மிகவும் கடினமான சவால்' என்று ஒருவர் கூறுகிறார், அதே நேரத்தில் 'MrBeast இந்த வெறிச்சோடிய நகரத்தைப் புதுப்பிக்க வேண்டும், இதனால் மக்கள் மீண்டும் இங்கு வாழ முடியும்' என்று ஒருவர் கூறுகிறார்.