Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ம.பி. தேர்தலில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி: ஆன்லைன் டோக்கன் முறை, டிஜிட்டல் செல்ஃபி பாயிண்ட் அறிமுகம்!

11:49 AM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, அசரவைக்கும் பல செயல்களை செய்து வரும் நிலையில், மத்தியப்பிரதேசம் தேர்தலிலும் அதன் ஆதிக்கம் தொடங்கியுள்ளது.

Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐந்து மாநில தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி, 5 மாநில தேர்தல் தொடங்கியது. சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நேற்று தோ்தல் நடைபெற்றது. இதில் 5.60 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மாநிலம் முழுவதும் 64,626 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. 

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, அசரவைக்கும் பல செயல்களை செய்து வரும் நிலையில், தேர்தலிலும் அதன் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்திய பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வாக்குச்சாவடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

குறிப்பிட்ட இந்த வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டாம். செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கேமராவின் உதவியுடன், மை வைக்கப்படும் விரலை செல்ஃபி எடுத்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. நந்தா நகரில் உள்ள மா கனகேஸ்வரி தேவி அரசு கல்லூரியில் இந்த ஸ்மார்ட் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த ஸ்மார்ட் வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்காமல் இருக்க, ஆன்லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வாக்களிக்க வரும் மக்களுக்கு டோக்கன் எண்கள் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் முறை வரும் வரை வாக்குச்சாவடியில் வசதியாக அமர்ந்து கொள்ளலாம்.

வாக்குச் சாவடியில் டிஜிட்டல் செல்ஃபி பாயிண்ட் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏஐ வசதி உள்ள கேமரா பொருத்தப்பட்டிருந்தது. வாக்களித்த பிறகு, ஒருவர் இந்த இடத்தில் நின்று கேமராவில் மை உள்ள விரலைக் காட்டினால், உடனடியாக செல்ஃபி கிளிக் செய்யப்படும். அதற்கான பார்கோடு செல்ஃபி பாயின்ட்டில் திரையில் தோன்றும். அதை ஸ்கேன் செய்வதன் மூலம் புகைப்படம் வாக்காளரின் மொபைல் ஃபோனுக்கு அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும். பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

Tags :
AI CameraElectionMadhya pradeshMP electionNews7Tamilnews7TamilUpdatesselfie pointSmart Polling Station
Advertisement
Next Article