For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MP | சுற்றுலா சென்ற இடத்தில் ராணுவ அதிகாரிகள் தாக்கப்பட்டு, தோழி பாலியல் வன்கொடுமை!

11:06 AM Sep 12, 2024 IST | Web Editor
 mp   சுற்றுலா சென்ற இடத்தில் ராணுவ அதிகாரிகள் தாக்கப்பட்டு  தோழி பாலியல் வன்கொடுமை
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் 2 பயிற்சி இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது 2 பெண் தோழிகள் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒரு பெண் 8 ஆண்கள் கொண்ட ஆயுதக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தாக்குதல் நடத்தியவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் குற்றப் பின்னணி கொண்டவர். மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ்-மண்டலேஷ்வர் சாலையில் சோட்டி ஜாம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

23 மற்றும் 24 வயதுடைய 2 அதிகாரிகள், மோவ் கன்டோன்மென்ட் நகரில் உள்ள காலாட்படைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள், தனது 2 பெண் நண்பர்களுடன் நேற்று முன்தினம் (செப். 10) மாலை சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு ஜோடி காரிலும், மற்ற ஜோடி மலை உச்சியிலும் இருந்துள்ளனர். அதிகாலை 2 மணியளவில் மர்ம கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கைத்துப்பாக்கி, கத்திகள் மற்றும் தடிகளுடன் அங்கு வந்துள்ளனர். காரில் இருந்த தம்பதியை அவர்கள் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு மலை உச்சியில் இருந்து இருவர் கார் இருக்கும் பகுதிக்கு வந்தனர்.

அவர்களிடம் இருந்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. காரில் இருந்த இருவரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக வைத்திருந்த மர்ம நபர்கள், இரண்டாவது அதிகாரி மற்றும் அவரது பெண் தோழியிடம் ரூ.10 லட்சம் தொகையை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். எனவே, அவர் மீண்டும் ராணுவத் தளத்திற்குச் சென்று, தனது மேல் அதிகாரிக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக போலீசாரை எச்சரித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும், ராணுவத்தினரும் விரைவதற்குள், குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக Mhow சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பயிற்சி அதிகாரிகள் இருவரும் காயமடைந்தனர்.மருத்துவப் பரிசோதனையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்று பட்கொண்டா காவல் நிலையப் பொறுப்பாளர் லோகேந்திர சிங் ஹிரோர் தெரிவித்துள்ளார்.

மேலும் மர்மகும்பல் மீது, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளையடித்தல், கும்பலாக பலாத்காரம் செய்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 2016 இல் கொள்ளை வழக்கில் பதிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கும்பலை சேர்ந்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement