ம.பி., சட்டசபை தேர்தல்: முதலமைச்சர் சிவராஜ் சிங் ஒரு நல்ல நடிகர் | காங்கிரசை காப்பி அடிக்கிறார் -கமல்நாத் விமர்சனம்...
பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நல்ல நடிகரான சிவராஜ் சிங் , மும்பைக்கு சென்று நடிப்பு தொழிலை மேற்கொண்டு மத்திய பிரதேசத்தையே பெருமைப்படுத்துவார். நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மக்கள் விடைகொடுப்பார்கள். ஆனால் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதால் சவுகான் வேலையில்லாமல் இருக்கமாட்டார் என்று கமல்நாத் கூறினார். பணம்த்தின் அடிப்படையில் இயங்கும் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
18 ஆண்டுகளில் பாஜக மாநிலத்தை சீரழித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்துக்கானது என்றும், எந்த வேட்பாளருக்காகவும் அல்ல என்றும் கூறினார். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்த முதலமைச்சர் சவுகான், குறைந்த பட்சம் காலியாக உள்ள அரசு பதவிகளையாவது நிரப்பப்படும். பாஜகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்றார். அவர்களிடம் சுதந்திரமான சிந்தனை இல்லை. பார்வை இல்லை அதனால் காங்கிரசை காப்பி அடிக்கிறார்கள் என்று கமல்நாத் கூறினார்.