For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

UAE திறமையாளர்களுக்கு சினிமா வாயிலைத் திறக்கும் மூவி மேக்கர்ஸ் கிளப்! ஜீ. பாபு ராமகிருஷ்ணனின் புதிய முயற்சி...!

பிரபல தொழில் அதிபரும் Triple M Production  நிறுவனத்தின் நிறுவனருமான ஜீ .பாபு  ராமகிருஷ்ணன் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார்.
05:49 PM Dec 06, 2025 IST | Web Editor
பிரபல தொழில் அதிபரும் Triple M Production  நிறுவனத்தின் நிறுவனருமான ஜீ .பாபு  ராமகிருஷ்ணன் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார்.
uae திறமையாளர்களுக்கு சினிமா வாயிலைத் திறக்கும் மூவி மேக்கர்ஸ் கிளப்  ஜீ  பாபு ராமகிருஷ்ணனின் புதிய முயற்சி
Advertisement

பிரபல தொழில் அதிபரும்Triple M Production  நிறுவனத்தின் நிறுவனருமான ஜீ .பாபு  ராமகிருஷ்ணன் மூவி மேக்கர்ஸ் கிளப் என்ற புதிய சங்கத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. மஞ்சுளா ராமகிருஷ்ணன், ஜெகன், சந்தோஷ், கோமதி, மோகன், ஆகியோர் ஒருங்கிணைத்த இந்த விழாவை ஆர்ஜே சாரா தொகுத்து வழங்கினார்.

Advertisement

திரைப்பட இசைப்பாளர் சிற்பி, நடிகர் பக்ஸ் என்ற பகவதி, திரைப்பட மக்கள் தொடர்பு நிகில் முருகன், நடிகை சௌமியா மேனன், இயக்குனர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் மற்றும் அமீரகத்தில் உள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்புவிருந்தினர்களாக அமீரகத்தைச் சார்ந்த துபாய் திரைப்பட நடிகர் அப்துல்லா அல் ஜஃபாலி, டோக்கியோ தமிழ் சங்கம் ஹரி, ஈரோடு அம்மன் மெஸ் இயக்குனர் வெங்கட், துபாய் ஈமான் பொதுச்செயலர் ஹமீது யாசின், எஸ் ஈவென்ட் நிறுவனர் ஹரி, தினத்தந்தி மேலாளர் ராம், முத்தமிழ் சங்க தலைவர் ஷா, முத்தமிழ் சங்க ராமகிருஷ்ணன், ஜிவி ப்ரொடக்ஷன் பிரசாத், கேப்டன் டிவி & தவசி தொலைக்காட்சி வளைகுடா நெறியாளர் கமால் கேவிஎல் தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா பெர்னாண்டஸ், கள்ளக்குறிச்சி சின்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிறுவனம் குறித்து பேசிய ராமகிருஷ்ணன், ”பல கனவுகளோடு அமீரகத்தில் இருக்கும் திறமையான கலைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கான மேடையை அமைத்துக்கொடுக்கும் வண்ணம் இந்த மூவி மேக்கர்ஸ் கிளப் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜீ.பாபு ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி என்னும் ஊரில் ஜூன் 8. 1981-ல், பிறந்தவர் ராமகிருஷ்ணன் குருமூர்த்தி என்கிற ஜி.பாபு. அப்பா ஆர். குருமூர்த்தி அம்மா ஜி.சத்தியபாமா, கடும் வறுமையிலும் குழந்தையை கல்வி கற்க வைக்கவேண்டுமென்ற நோக்கம் கொண்ட பெற்றோர். தனது பள்ளிப்படிப்பை குருக்கத்தி மற்றும் கீழ்வேளூரில் முடித்த ராமகிருஷ்ணன், பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றார்.

சகோதரர் பிரபு சேமிப்பில் இருந்து கொடுத்த பத்தாயிரம் ரூபாயில் விமான டிக்கெட் வாங்கிய ராமகிருஷ்ணன், அப்பா ஆர். குருமூர்த்தி கடன் வாங்கி கொடுத்த அறுபதாயிரம் ரூபாய் கடனுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கனவுகளை தேடி கால் வைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 800 திர்ஹாம் சம்பளத்தில் துவங்கிய அவர் தனது கடுன உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் படிப்படியாக உயரத்தொடங்கினார்.

துபாயில் 2015ஆம் ஆண்டு Fortune Five General Trading LLC என்ற நிறுவனம் ஒன்றைத் நிறுவினார் ராமகிருஷ்ணன். கடந்த 10 ஆண்டுகளில் FMCG பொருட்கள் விநியோகத்தில் விரைவான வளர்ச்சியை எட்டியுள்ளது Fortune Five General Trading LLC. அவரது ஒட்டுமொத்த குழுமத்தின் ஆண்டு விற்பனை AED 200 மில்லியன் என்ற இமாலய எண்களை தொட்டுள்ளது. இந்த வெற்றிகளுக்கு ராமகிருஷ்ணனின் சீரியத் தலைமை மற்றும் அனுபவம் ஒரு காரணாம் என்றால் மற்றொரு காரணம் அவரின் மனைவி மஞ்சுளா.

தனை போல கஷ்டப்படும் பலரையும் மேலே தூக்கி விட எண்ணிய  ராம்கிருஷ்ணன், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகள், மருத்துவ உதவிகள் மற்றும் தாய்நாட்டுத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வேலைவாய்ப்புகள் என தனது சமூக சேவையில் அர்ப்பணிப்பு காட்டுகிறார். இதனால் பல சர்வதேச விருதுகளையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

சிறு வயது முதலே கலை மற்றும் ஊடகம் மீது ஆர்வம் கொண்ட ராமகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்படத் துறையில் சாதிக்கும் பொருட்டு, தற்போது Triple M Production என்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

Tags :
Advertisement